அனைவருக்கும் வணக்கம்
குருநானக் கல்லூரியின் தமிழ் மாணவர்கள் (gnctamilstudents.blogspot.in) என்னும் இவ்வலைப்பூ இன்று (11.02.2013) முதல் தம் இடுகைகளை தமிழ் கூறு நல்லுலகிற்கு அளிக்க உள்ளது.
சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் மாணவர்களின் படைப்புகளுக்கான களமாக இவ்வலைப்பூ அமையும்.
மாணவர்களின் படைப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் முதலானவை இவ்வலைப்பூவில் உடனுக்குடன் சேர்க்கப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை வெளிவரும் ஆண்டுமலரில் அனைத்து மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறுவது என்பது இயலாத நிலையில் அக்குறைபாட்டை ஈடுசெய்யும் விதமாக இவ்வலைப்பூவில். மாணவர்களின் சிறந்த படைப்புகள் தொடர்ந்து இடம்பெறும்.
மேலும் சிறந்த படைப்பாற்றல் உடைய மாணவர்களும் இவ்வலைப்பூவில் துணை ஆசிரியர்களாக செயல்படுவார்கள். மாணவர் தம் படைப்பாற்றல் பெருக, தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் என்றும் உதவிகரமாக இருப்பார்கள் என்பதைப் பணிவோடு கூறிக்கொள்கின்றோம்.
வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
மு.தியாகராஜ்
தமிழ்த்துறைத்தலைவர்
குருநானக் கல்லூரி (சுழற்சி-2)

No comments:
Post a Comment