Wednesday, 20 February 2013

வாழும் தமிழ்-2013 விழா (11.02.2013) நிகழ்வுகள்




   குருநானக் கல்லூரி (சுழற்சி-2),  தமிழ்த்துறை சார்பாக  வாழும் தமிழ் -2013 என்ற தலைப்பில் தமிழ் மன்ற விழா பிப்ரவரி-11 அன்று        மாலை 4.00 மணியளவில் கல்லூரியின் புதிய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. 

   விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். மெர்லின் மொரைஸ் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். விழாவிற்கு வருகை தந்தோரை தமிழ்த்துறைத் தலைவர். மு. தியாகராஜ் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் இயக்குனர். முனைவர். டி.ஆர்.ஏ. தேவகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்காக திட்டமிட்டு உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

   குருநானக் கல்லூரியின் தமிழ் மாணவர்களின் படைப்புகளுக்கான களமாக, புதியதாக உருவாக்கப்பட்ட வலைப்பூவான (BLOG)  gnctamilstudents.blogspot.in என்ற வலைப்பக்கத்தை கல்லூரி முதல்வர். முனைவர். மெர்லின் மொரைஸ் துவங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பயனுறக்கூடிய 100 மின்னூல்கள் அடங்கிய குறுவட்டை இயக்குனர். டி.ஆர்.ஏ. தேவகுமார் அவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.

 தமிழ்த்துறை நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும், மின்னூல்கள் அடங்கிய குறுவட்டும் வழங்கப்பட்டன. அதன் பின்னர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்த்துறை விரிவுரையாளர். செ.ஸ்டாலின் நன்றியுரை நிகழ்த்தினார். மாணவி. செல்வி. சத்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண் இசையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment