Sunday, 5 January 2014

குருநானக் கல்லூரி - தமிழ் மன்ற விழா - 18.12.2013


நமது குருநானக் கல்லூரியின் தமிழ் மன்ற விழா 18.12.2013 அன்று காலை 11.00 மணியளவில்,  கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில்  மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்று ஊடகவியலாளர் திரு. டி.எஸ். எஸ். மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். மு. மூர்த்தி அவர்கள் வரவேற்புரையும், தமிழ்மன்ற துணைத்தலைவர். முனைவர். என். பிரவீண் குமார் அவர்கள் அறிமுகவுரையும் நிகழ்த்தினர். கல்லூரி முதல்வர்  முனைவர். மா. செல்வராஜ் அவர்கள் தலைமையுரையாற்றினார். இவ்விழாவில் குறும்படம் திரையிடல், பாடல்,இசை, தமிழோடு விளையாடு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மன்ற செயலர். திரு. குமரேசன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவினை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் மன்ற உறுப்பினர்கள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment