Tuesday 28 August 2018

பொதிகை தொலைக்காட்சியில் குரு நானக் மாணவர்கள்

பொதிகை - ழகரம் - குருநானக் மாணவர்கள்

பொதிகை தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் நேரலை நிகழ்ச்சியான ழகரம் - எனும் தமிழ் மரபு, தமிழ்வளர்ச்சி சார்ந்த வார்த்தை விளையாட்டுப் போட்டிகளில் நமது குரு நானக் கல்லூரியின் தமிழ் மன்ற மாணவர்கள் 23.09.2017 கலந்து கொண்டு சிறப்புற விளையாடினர்.
அந்த விளையாட்டு நிகழ்ச்சியின் காணொளித் தொகுப்பு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday 23 August 2018

குருநானக் கல்லூரி மாணவர்களின் சிறப்பு சுதந்திரதின விவாத அரங்கம்

 என்.ஆர்.எஸ். ராயல் தொலைக்காட்சி குருநானக் கல்லூரி தமிழ்த்துறையுடன்  இணைந்து விவாத அரங்கம் ஒன்றை நடத்தினர். சுதந்திர தின சிறப்பு விவாத அரங்கமாக நடைபெற்ற இவ்விவாதம் வேற்றுமைகளை உடைத்து இந்தியர்களை ஒன்றுபடுத்துவது மரபுசார்ந்த சிந்தனைகளா? நவீனத்துவ சிந்தனைகளா என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் நமது கல்லூரியின் தமிழ் மன்ற மாணவர்கள் விவாதத்தில் பங்கேற்று சிறப்புற தம் கருத்துக்களை பகிர்ந்தனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 அதன் காணொளிகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன..

பகுதி -1


பகுதி - 2




பகுதி-3



Sunday 5 January 2014

குருநானக் கல்லூரி - தமிழ் மன்ற விழா - 18.12.2013


நமது குருநானக் கல்லூரியின் தமிழ் மன்ற விழா 18.12.2013 அன்று காலை 11.00 மணியளவில்,  கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில்  மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்று ஊடகவியலாளர் திரு. டி.எஸ். எஸ். மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். மு. மூர்த்தி அவர்கள் வரவேற்புரையும், தமிழ்மன்ற துணைத்தலைவர். முனைவர். என். பிரவீண் குமார் அவர்கள் அறிமுகவுரையும் நிகழ்த்தினர். கல்லூரி முதல்வர்  முனைவர். மா. செல்வராஜ் அவர்கள் தலைமையுரையாற்றினார். இவ்விழாவில் குறும்படம் திரையிடல், பாடல்,இசை, தமிழோடு விளையாடு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மன்ற செயலர். திரு. குமரேசன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவினை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் மன்ற உறுப்பினர்கள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

Friday 13 December 2013

தமிழ் மன்றம் -2013 – போட்டி முடிவுகள்

தமிழ் மன்றம் -2013 - போட்டி முடிவுகள்

குருநானக் கல்லூரி -தமிழ்த்துறையின் தமிழ் மன்றம் சார்பாக 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் பரிசு பெற்ற மாணவர்களின் பட்டியல் கீழே போட்டி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.  

பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்துறையின் வாழ்த்துகள். 18.12.2013(புதன்கிழமை) அன்று முற்பகல் 10.30. மணிக்கு கருத்தரங்க அறையில் (A/C Seminar Hall)  நிகழவிருக்கும்  தமிழ்மன்ற விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அனைவரும் வருக.

பேச்சுப்போட்டி :
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
ஜெயபிரகாஷ்
பாதுகாப்பியல்-III
இரண்டாம் பரிசு
மோனிகா
முதுநிலை வணிக நிர்வாகம்-I
*மூன்றாம் பரிசு
திவ்யா
தாவர உயிரியல் & தாவர தொழில் நுட்பவியல்-II
*மூன்றாம் பரிசு
பரத்குமர்
இயற்பியல்-III
ஆறுதல் பரிசு
விக்னேஷ்
தாவர உயிரியல் & தாவர தொழில் நுட்பவியல்-III

கட்டுரைப் போட்டி
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
கு.பிரசாந்த்
இயற்பியல் –I
இரண்டாம் பரிசு
க.உதயகுமார்
கணிதவியல்- III
மூன்றாம் பரிசு
R.பிரேமலதா
தாவரவியல்
ஆறுதல் பரிசு
சு.ஐயப்பன்
முதுநிலை வணிக நிர்வாகம்-I

கவிதைப் போட்டி
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
க.கண்ணன்
வேதியியல்-III
இரண்டாம் பரிசு
ர.தனலட்சுமி
முதுநிலை வேதியியல்-II
மூன்றாம் பரிசு
ஞா.பாலமுரளி
முதுநிலைவணிக நிர்வாகம்-II
ஆறுதல் பரிசு
சி.பரத்குமார்
இயற்பியல்-III



கதைப் போட்டி
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
ர. பிரேமலதா
தாவர உயிரியல் & தாவர தொழில் நுட்பவியல்
இரண்டாம் பரிசு
s.ஷர்மிளா
பாதுகாப்பியல் -III
மூன்றாம் பரிசு
ர.பிரபாக்கியன்
கணிதவியல்-III
ஆறுதல் பரிசு
J.ஜெயகுமார்
தாவர உயிரியல் & தாவர தொழில் நுட்பவியல் -I

பாடல் போட்டி
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
மணிகண்டன்
முது நிலை வேதியியல்-I
இரண்டாம் பரிசு
கண்ணன்
வேதியியல்-III
மூன்றாம் பரிசு
வைஷ்ணவி
வணிகவியல் -III
ஆறுதல் பரிசுகள்
*ஷர்மிளா
*s.கோமதி
*சௌமியா
*பாதுகாப்பியல் –III
*வணிகவியல்- III
*கணிதவியல் -II

வினாடி வினா
பரிசு
பெயர்
துறை
முதற் பரிசு
p.ஜெயசந்திர பிரசாத்
s.ரீகன்
முதுநிலை வணிகவியல் - II
இரண்டாம் பரிசு
s.கார்திகேயன்
s.யோகேஷ்வரன்
முதுநிலை வணிக நிர்வாகவியல்-II
மூன்றாம் பரிசு
கோபி
விஜய்
முதுநிலை வணிக நிர்வாகவியல்-II
மூன்றாம் பரிசு
தமிழரசன்
செந்தில் பிரபு
இயற்பியல் -I

தமிழோடு விளையாடு
தேர்ந்தெடுக்கப்பட்டோர்
பெயர்
துறை
1
ஜனனி
 கணிதவியல் - II
2
சரண்யா
கணிதம்-I
3
p.மணிகண்டன்
முதுநிலை வேதியியல் -II
4
சங்கீதா
கணிதம்-I
5
பாலமுருகன்
வேதியியல் - III


                                                                                                    தமிழ்மன்றம்

                                                                   தமிழ்த்துறை, குரு நானக் கல்லூரி

Wednesday 20 February 2013

வாழும் தமிழ்-2013 விழா (11.02.2013) நிகழ்வுகள்




   குருநானக் கல்லூரி (சுழற்சி-2),  தமிழ்த்துறை சார்பாக  வாழும் தமிழ் -2013 என்ற தலைப்பில் தமிழ் மன்ற விழா பிப்ரவரி-11 அன்று        மாலை 4.00 மணியளவில் கல்லூரியின் புதிய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. 

   விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். மெர்லின் மொரைஸ் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். விழாவிற்கு வருகை தந்தோரை தமிழ்த்துறைத் தலைவர். மு. தியாகராஜ் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் இயக்குனர். முனைவர். டி.ஆர்.ஏ. தேவகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்காக திட்டமிட்டு உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

   குருநானக் கல்லூரியின் தமிழ் மாணவர்களின் படைப்புகளுக்கான களமாக, புதியதாக உருவாக்கப்பட்ட வலைப்பூவான (BLOG)  gnctamilstudents.blogspot.in என்ற வலைப்பக்கத்தை கல்லூரி முதல்வர். முனைவர். மெர்லின் மொரைஸ் துவங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பயனுறக்கூடிய 100 மின்னூல்கள் அடங்கிய குறுவட்டை இயக்குனர். டி.ஆர்.ஏ. தேவகுமார் அவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.

 தமிழ்த்துறை நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும், மின்னூல்கள் அடங்கிய குறுவட்டும் வழங்கப்பட்டன. அதன் பின்னர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்த்துறை விரிவுரையாளர். செ.ஸ்டாலின் நன்றியுரை நிகழ்த்தினார். மாணவி. செல்வி. சத்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண் இசையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Sunday 10 February 2013

வாழும் தமிழ்-2013 - தமிழ்மன்ற விழா



   குருநானக் கல்லூரி(சுழற்சி-2), தமிழ்த்துறையின் சார்பாக இன்று மாலை 3.00 மணியளவில் வாழும்தமிழ்-2013 என்ற பெயரிலான விழா நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முதல்வர்.  முனைவர். மெர்லின் மொரைஸ் அவர்களும், கல்லூரியின் இயக்குனர்  முனைவர். டி.ஆர்.ஏ. தேவகுமார் அவர்களும் கலந்து கொள்ள இசைவு அளித்துள்ளனர்.
                                       அனைவரும் வருக! ஆதரவு தருக!
                                                        
                                                                                                வரவேற்கின்றோம்
                                                                                     தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.

                                                          

பரிசு பெற்ற கவிதைகள்

வாழும் தமிழ்-2013 போட்டிகளில் வான்பொய்த்தால் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற்றது. அவற்றில் பரிசு பெற்ற கவிதைகள் இங்கே...

முதல் பரிசு பெற்ற செ. ராஜ்குமாரின் கவிதை

வான்பொய்த்தால்















கங்கை நதி அருகினிலே
செழித்த வயலினிலே
கதிர் அறுக்கும் உழவனைக் கண்டேன்

ஆற்றங் கரையினிலே
அரசமர நிழலினிலே
குமரிப்பெண்கள் குளித்திடக் கண்டேன்

ஊரின் நடுவினிலே
ஆலமர நிலழினிலே
ஊரார் கூடி மகிழ்ந்திடக் கண்டேன்

ஓங்கி உயர்ந்த மரங்களும்
ஊரை நிறைக்கும் வளங்களும்
மங்களமாய் செழித்திட கண்டேன்

திடிரென ஓர் சத்தம்
கனவு கலைந்து எழுந்தேன்
என் கண்ணில் மழைத் தூறல் துவங்கியது
வான் பொய்த்தால்...?

உணவளிக்கும் உழவர்கு
தாயின்றி போனால்?

ஓங்கி உயர்ந்த காடுகளுக்கு
தோழனின்றி போனால்
அவ்வப்போது வந்துபோகும்
சொந்தமின்றி போனால்?

வான் பொய்த்தால்..?

உழவர்கள் கண்ணீரில் 
ஏர் பூட்டலாம்

மழலையர் பன்னீரில்
குளிக்கலாம்

காடுகள் மறைய
வீடுகள் கட்டலாம் 

குடிக்க நீரின்றி
கும்மாளம் அடிக்கலாம்

இவையாவும் நிச்சயம் நடக்கும்..
வான் பொய்த்தால்..?

வான் பொய்த்தால்..?
நாட்டின் பெரும்பாலான விவசாயிகள்
தொழில்நுட்பப் பூங்காவில் இணைந்தனர்.

மீதமுள்ள விவசாயிகள்
தூக்குக் கயிறு வாங்கவும் விஷம் வாங்கவும்
வங்கிகடன் வாங்கினர்.

விவசாய நிலங்கள் வீடுகளாகவும்
தொழிலகங்களாகவும் மாறின.

இவையாவும் நிச்சயம் நடந்திராது
மழை பொழிந்திருந்தால்...

இந்த தகவலை நாட்டின் மக்களுக்கு 
அறிவித்தார் பிரதமர்...

இரண்டாம் பரிசு பெற்ற விஜயகுமாரின் கவிதை
வான் பொய்த்தால்!














தோகைவிரித்தாடும் மயில்களின் நடனம்
கல்லுக்கடியில் கணைக்கும் தவளைகள்
தரை தொடாது பறக்கும் தும்பிகள்
தேன் தெரிக்க ரிங்காரமிடும் வண்டுகள்
இருப்பிடம் தேடி அணிவகுக்கும்
இரை சுமக்கும் எறும்புகள்
கூடுகள் நோக்கி பறக்கும் பறவைகள்

தேக தாகம் தீர்க்க துடிக்கும் மண்
இலை இழந்த மரங்களின் ஆரவார வரவேற்பு
வாடிய பூச்செடிகளின் தேன் கசிவு
சூடானதும் சுகந்தம் பரப்பும் தென்றல்
கருவுற துடிக்கும் விதைகள்
வான் மேகத்தை உற்று நோக்கும்
உழைக்கும் உழவர்களின் கண்கள்

ஆடை இழந்த மொட்டை மாடி கொடிக் கம்பங்கள்
நாணத்தால் மூடின வீட்டு ஜன்னல்கள்
தாயின் கதகதப்பை ஏற்க்க மறுக்கும் சேய்
மூலையில் முடங்கிய குடை பூவின்
மொட்டுகள் விரிய காத்திருக்க... இவையெல்லாம்
உன் வருகையின் முன் பதிவுகள்.
கோடை விடுமுறை முடிந்தும்
நீ வராதது ஏனோ?

உயிர்களுக்கெல்லாம் விருந்தளிக்கும் மழையே!
வண்ணமிகு பூக்களில் நுகர்ந்ததில்லை!
வாசம் பொங்கும் திரவியத்தில் கண்டதில்லை!
நீ வந்த சில நொடிகளில்,
மனதை ஈர்க்கும் மண் வாசனையை!